முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
- IndiaGlitz, [Saturday,January 13 2018]
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ப.சிதமரம் வீட்டில் இன்று காலை முதல் வருமான அமலாக்கத்துறை அதிகாரிகL சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திலும், அவரது சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள வீட்டிலும் இன்று காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பெற உதவியதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் கார்த்திக் சிதம்பரம் அன்றைய தேதியில் ஆஜராகவில்லை என்பதால் அதுதொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன. .