நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Friday,October 18 2024]
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா என்பதும், பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர், சமீப காலமாக திரைப்படங்களில் சிங்கிள் பாடலுக்கு நடனமாடி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் தமன்னா நடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணைக்கு அசாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து தனது தாயுடன் தமன்னா கவுஹாத்தி சென்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், விசாரணை குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.