close
Choose your channels

மீண்டும் இணைகிறதா 'எனிமி' டீம்? இயக்குனர் மட்டும் மாற்றமா?

Monday, November 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘எனிமி’ புரமோஷன் விழாவில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்கள் மீண்டும் விஷால் படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ‘எனிமி’ படத்தை அடுத்து மீண்டும் வினோத்குமார் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால் தற்போது ’வீரமே வாகை சூடும்’, ‘லத்தி’ மற்றும் ’துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த உடனே ‘எனிமி’ தயாரிப்பாளரின் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஆர்யாவும் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே பிரபுதேவா நடித்துள்ள ’பாஹிரா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment