சீன மார்க்கெட்டை குறிவைக்கும் '2.0'
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் முதல்முறையாக 'மலாய்' மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மலேசியாவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான '2.0' திரைப்படத்தை சீன மொழியில் டப் செய்து சீனாவிலும் மிகப்பெரிய அளவில் வெளியிட படக்குழுவ்னர் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 'பாகுபலி' படம் விரைவில் சீனாவில் சுமார் 6000 திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது '2.0' படமும் சீன மார்க்கெட்டை பிடிக்கவுள்ளது. இந்த படத்தின் ரோபோ கேரக்டர் சீனர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலம் என்பதாலும், ரூ.350 கோடி பட்ஜெட், ஷங்கரின் உலகத்தரமான படப்பிடிப்பு, ரஜினியின் பிரபலம் ஆகியவை இந்த படத்தை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், நிரவ் ஷா ஒளிப்பதிவும் செய்து வருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் செப்டம்பரிலும் படம் வரும் 2017ஆம் ஆண்டிலும் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout