close
Choose your channels

ஷங்கரின் 2.0 படத்தில் எத்தனை பாட்டு. ராஜுமகாலிங்கம் விளக்கம்

Thursday, March 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமும் பாடல்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அவருடைய முதல் படமான ஜெண்டில்மேன் படத்தில் இருந்து 'எந்திரன்' வரை கிட்டத்தட்ட அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆவதோடு அந்த பாடல்களின் விஷுவல் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும்.
இந்நிலையில் ஷங்கரின் '2.0 படத்தில் ஒரே ஒரு பாடல்தான் இடம்பெற்று இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது. ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ரூ.350 கோடி பட்ஜெட் என பிரமாண்டமாக உருவாகும் படத்தில் ஒரே ஒரு பாடல் இருப்பது சாத்தியமே இல்லை என ஒருசிலர் அடித்து கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜுமகாலிங்கம், '2.0' படத்தின் ஆடியோ ரிலீஸ் வரை பொறுத்திருங்கள். இந்த படத்தில் எத்தனை பாடல்கள் இருக்கின்றது என்ற செய்தியை கேட்டு ஆச்சரியப்படுவீர்கள்' என்று கூறியுள்ளார். அவர் நம்பிக்கையுடன் கூறியதை பார்க்கும்போது கண்டிப்பாக இந்த படத்தில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment