பேட்மேன் - சூப்பர் மேனுடன் கனெக்ஷன் ஆன '2.0

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]

லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படம் '2.0'. இந்த படத்தை தமிழ்ப்படம் என்று சொல்வதை விட ஹாலிவுட் படம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஹாலிவுட் கலைஞர்களும் இந்த படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை Die Hard மற்றும் Transformers படங்கள் உள்பட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக இருந்த Kenny Bates பணிபுரிகின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மேலும் ஒரு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Batman vs Superman படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த Aaron Crippen என்பவர் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஒரு முக்கிய ஸ்டண்ட் காட்சியில் ஸ்டண்ட் சில்வா உள்ளூர் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு டிரைனிங் கொடுப்பார் என்றும் அதை Aaron Crippen மேற்பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் 3D டெக்னாலஜியில் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.