என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுட் சகுனிகார்த்திக் ஆய்வாளரை மிரட்டும் ஆடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மதுரையில் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ரவுடிகளில் ஒருவராகிய சகுனிகார்த்திக், சில நாட்களுக்கு முன் ஆய்வாளர் ஒருவரை செல்போனில் மிரட்டிய உரையாடல் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருவேன் சார் ரெடியா இருந்துக்கோங்க என்றும், முடிந்தால் வந்து பிடித்து கொள்ளுங்கள் என்றும் அந்த ஆடியோவில் கூறியுள்ள சகுனி கார்த்திக், இன்னும் பத்து நாளில் ஒரு சம்பவம் நடக்கவுள்ளதாகவும், மதுரைக்கு வந்து என்ன செய்ய போகிறோம் என்பதை பார்த்து கொண்டே இருங்கள், அதை முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும் ‘எனது ஆட்களை அடிக்கடி மிரட்டி வருகிறீர்கள். நீங்கள் ரிவார்டு வாங்குவதற்காக எங்களிடமும் ரிவால்வர் உள்ளது' என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ எப்போது யாரால் பதிவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் இல்லை என்றாலும் இந்த உரையாடலுக்கு பின்னர் தான் மதுரை போலீசார் சகுனிகார்த்தி மற்றும் முத்து இருளாண்டியை வேட்டையாட தயாராகியதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout