close
Choose your channels

ரஜினியின் '2.0' படத்துடன் கனெக்ஷன் ஆன ஜி.வி.பிரகாஷ்

Sunday, May 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டிலில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை ரஜினி படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆம், இந்த படத்தின் பாடல்களை '2.0' படத்தின் வில்லனும் பிரபல பாலிவுட் நடிகருமான அக்ஷயகுமார் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், அன்றைய தினம் அக்ஷயகுமார் சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளது மட்டுமின்றி இசையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷூடன் கயல்' ஆனந்தி, கருணாஸ், நிரோஷா, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இந்த படத்தை '2.0' படத்தை தயாரித்து வரும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment