'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படம் U/A சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படம் 130 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடுகின்றது. சரியான அளவில் இந்த படம் அமைந்துள்ளதாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பது இந்த படத்தின் பாசிட்டிவ் ஆக கருதப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ், 'கயல்'ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

சித்தார்த்துக்கு ஜோடியாகும் கமல் நாயகி

சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கு பின்னர் அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளது...

'கபாலி' ரசிகர்களுக்கு நாளை இன்னொரு இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் நாளை வெளிவரவுள்ளதால் 'நெருப்புடா...

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' சென்சார் தகவல்கள்

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கோலிவுட்டில் மீண்டும் வெற்றிகரமாக ரீ எண்ட்ரி ஆன அவர் தற்போது 'ஜாக்சன் துரை'...

சீன மார்க்கெட்டை குறிவைக்கும் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் முதல்முறையாக 'மலாய்' மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மலேசியாவில் ரிலீஸ் ஆகவுள்ளது...

கபாலி'க்கு முன்பே 'மகிழ்ச்சி' ஃபேமஸ். ரகசியத்தை உடைத்த 'மெட்ராஸ்' நடிகை

சமீபத்தில் வெளிவந்து உலக சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் டீசரின் இறுதியில் ரஜினிகாந்த் 'மகிழ்ச்சி'...