'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படம் U/A சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படம் 130 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடுகின்றது. சரியான அளவில் இந்த படம் அமைந்துள்ளதாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பது இந்த படத்தின் பாசிட்டிவ் ஆக கருதப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ், 'கயல்'ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.