முதன்முதலாக இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்-ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Monday,May 30 2016]

தமிழ் திரையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் பிரபலமாக உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இதுவரை எந்த படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை எனினும் தற்போது இருவரும் ஒரு விழாவில் இணையவுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூன் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் இந்த டிரைலரை ரிலீஸ் செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது டிரைலர் விழாவில் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்-ஜி.வி.பிரகாஷ் விரைவில் ஒரு திரைப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.