அடுத்த மாதம் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷ் படம்

  • IndiaGlitz, [Sunday,May 15 2016]

கடந்த வெள்ளியன்று ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான 'பென்சில்' திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்து வந்த இன்னொரு படமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுப்பகுதிக்கு வந்துவிட்டதால் இந்த படத்தை ஜூன் 17ஆம் தேதி வெளியிட செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், 'கயல்'ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ், பொன்னம்பலம், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.