close
Choose your channels

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. திரை முன்னோட்டம்

Monday, June 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் அதுவும் வெற்றிகரமாக பயணம் செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் இன்று தனது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் இவ்வாரம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்.

ஏற்கனவே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான '2.0' படத்தை தயாரித்து வரும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தின் கதையை கேட்டதும் இம்ப்ரஸ் ஆகி இந்த படத்தையும் தயாரிக்க முன்வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'பாட்ஷா' படத்தின் புகழ்பெற்ற வசனத்தை இந்த படத்தின் தலைப்பாக வைத்திருந்தபோதிலும் இந்த படம் ஆக்ஷனுக்கு மட்டுமின்றி காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.


'டார்லிங்' என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் மீண்டும் ஜி.வி.பிரகாஷூடன் இணைந்துள்ளார். அதேபோல் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து நடித்த 'கயல்' ஆனந்தி மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ள படம்தான் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'

ஜி.வி.பிரகாஷ் இசையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ஆக கருதப்படுகிறது. குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடலான 'கண்ணை நம்பாதே' பாடல் அனைத்து தரப்பினர்களும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.

இந்த படத்தின் சப்போர்ட்டிங் நட்சத்திரங்களாக சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை வரும் வெள்ளியன்று திரை விமர்சனத்தில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment