தனுஷ்-கவுதம்மேனன் படத்தின் கதை இதுதான்.

  • IndiaGlitz, [Saturday,July 02 2016]

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடிகையாக நடித்திருப்பதாகவும், அவர் மீது தீராத காதல் கொண்ட இளைஞன் கேரக்டரில் தனுஷ் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை மேகா ஆகாஷுக்கு எதிர்பாராதவிதமாக ஆபத்து ஒன்று நேர்வதாகவும், அந்த ஆபத்தில் இருந்து தனுஷ் காப்பாற்றியதால் அவருக்கு வரும் பிரச்சனைகள்தான் கதை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'இந்த படம் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் முதல் பாதி முழுக்க முழுக்க ரொமான்ஸ் ஆகவும், இரண்டாவது பாதி அதிரடி ஆக்சன் காட்சிகளும் அடங்கியது' என்று கூறியுள்ளார்.
தனுஷின் நடிப்பு குறித்து கவுதம் மேனன் கூறுகையில் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் சிங்கிள் டேக்கில் ஓகே செய்தார் என்றும், இயல்பாகவே அவருக்கு ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வருகிறது என்றும் கூறியுள்ளார்.