‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ படத்தின் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற திரைப்படம் வரும் மே மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் 168 நிமிடங்கள் அதாவது 2 மணி 48 நிமிடங்கள் ஓடுகிறது. மேலும் இந்த படம் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. 

அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத்குமார், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். விஷால் சேகர் இசையில், ராஜீவ் ரவி ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ராமலட்சுமி சினி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


 

More News

ஓங்கி அடிச்சா 110 மீட்டர் தூரம் 6 டா! இம்ரான் தாஹீர் அசத்தல் டுவீட்  

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தினமும் ஒரு அணி வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அது தலைப்பு செய்தியாக மாறுகிறது

பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய நூரின் செரிப்

'ஒரு ஆதார் லவ்' என்ற படத்தில் நடித்த பிரியா வாரியர், அந்த படத்தின் டீசரின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவருடைய ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம், இளைஞர்களை அடிமையாக்கியது

தோனியை புகழும் திரையுலக பிரபலங்கள்

தல தோனி ஒரு மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்பதை நேற்றைய போட்டி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

ரஜினியுடன் அதிகாரபூர்வமாக இணைந்த விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதமும், '2.0' ஆகிய திரைப்படம் வெகுவிரைவிலும் வெளியாகவுள்ள நிலையில் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது.. வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது