தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட தமிழ் சீரியல் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,August 20 2022]

ஆணும் பெண்ணும் இணைவது தான் திருமணம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக ஆண்களும் சரி பெண்களும் சரி தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

சமீபத்தில்கூட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு சிங்கிள் ஆகவே தேனிலவு சென்று வந்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சீரியல் நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியில் சூப்பர் ஹிட்டான ’தியா அவுர் பாத்தி ஹம்’ என்ற சீரியல் தமிழில் ’என் கணவன் என் தோழன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் கனிஷ்கா சோனி என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இவர் இன்ஸ்டாகிராமிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கனிஷ்கா சோனி மேலும் கூறியபோது, ‘தனிமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், நான் நினைத்தபடி எந்த ஒரு ஆண்மகனையும் இன்னும் பார்க்காததால் தனியாக இருக்க முடிவு செய்து விட்டேன் என்றும் கூறினார். மேலும் திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல என்றும், காதல் நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.