நடக்கக்கூட இடமில்லாத ரங்கநாதன் தெருவில், கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் பிஸியான இடங்களில் மிகவும் முக்கியமானது தி நகர் ரங்கநாதன் தெரு. இந்த தெருவில் தான் முக்கிய ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் இருப்பதாலும் மாம்பலம் ரயில் நிலையம் செல்லும் வழி என்பதாலும் இந்த தெருவில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை எந்நேரமும் பிசியாக இருக்கும்.
இந்த தெருவில் நடந்து செல்வதே மிகவும் கடினம் என்ற நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பீதி காரணமாக தி.நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து தி நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி இருக்கின்றன. மக்கள் கூட்டம் இன்றி இருக்கும் தி.நகரை இதுவரை பார்த்ததே இல்லை என அந்த பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தி.நகர் ரங்கநாதன் தெரு கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி இருப்பதால் அந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ரங்கநாதன் தெருவில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments