நடக்கக்கூட இடமில்லாத ரங்கநாதன் தெருவில், கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்

சென்னையின் பிஸியான இடங்களில் மிகவும் முக்கியமானது தி நகர் ரங்கநாதன் தெரு. இந்த தெருவில் தான் முக்கிய ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் இருப்பதாலும் மாம்பலம் ரயில் நிலையம் செல்லும் வழி என்பதாலும் இந்த தெருவில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை எந்நேரமும் பிசியாக இருக்கும்.

இந்த தெருவில் நடந்து செல்வதே மிகவும் கடினம் என்ற நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பீதி காரணமாக தி.நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து தி நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி இருக்கின்றன. மக்கள் கூட்டம் இன்றி இருக்கும் தி.நகரை இதுவரை பார்த்ததே இல்லை என அந்த பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி.நகர் ரங்கநாதன் தெரு கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி இருப்பதால் அந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ரங்கநாதன் தெருவில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாசா விஞ்ஞானியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் நாசா விஞ்ஞானியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்காக ரூ.7.42 கோடி நிதியுதவி செய்த நட்சத்திர தம்பதி

இந்தியா உள்பட உலகம் முழுவதும் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது 

"ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகளை பார்த்ததில்லை".. கதறும் இத்தாலி மருத்துவர்கள்..! #COVID19

"போர் களத்தில் நடந்து செல்வது போல உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை இறப்புகளை பார்த்ததில்லை" என மருத்துவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.   

நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை உறுதி!!! நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது

தமிழகத்தில் மேலும் ஒருவரை தாக்கிய கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சுமார் 150 பேருக்கு மேல் பரவி உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில்