தனுஷ்-வெற்றிமாறன் மீண்டும் இணைவதை உறுதி செய்த பிரபல தயாரிப்பாளர்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் என்பதும் அந்த ஐந்து படங்களில் பொல்லாதவன், ஆடுகளம், வடசன்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களில் தனுஷ் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இன்னொரு படமான ’விசாரணை’ திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார் என்பதும், எனவே வெற்றிமாறனின் 5 பாடங்களிலும் தனுஷின் பங்களிப்பு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் ஐந்தாவதாக ஒரு திரைப்படம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை தற்போது பிரபல தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நேற்று வெற்றிமாறனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தனுஷ் ரசிகர் ஒருவர் ’வெற்றிமாறனும் தனுஷூம் இணையும் புதிய படத்தை நீங்கள் தயாரிக்க போகிறார்களா என்பதை மட்டும் கூறுங்கள் போதும்’ என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ’ஆமாம்’ என்று கூறியுள்ளார். எனவே வெற்றிமாறன் மற்றும் தனுஷ் மீண்டும் இணைய உள்ளது உறுதி செய்திருப்பதாகவும் அந்த படத்தை எல்ரெட்குமார் தயாரிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் ஒரு படத்தையும், சூர்யா நடிப்பில் ’வாடிவாசல்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படத்தையும் முடித்து விட்டு அவர் தனுஷுடன் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் விஜய்யிடமும் கதை சொல்லியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.