காதலிக்கு கொரோனா… புது சிக்கலில் உலகின் பெரிய பணக்காரர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
Spacex மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக மாறி இருக்கிறார். இத்தகவலை கடந்த வாரம் முதல் அமெரிக்க ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. இந்நிலையில் எலான் மஸ்க்கின் காதலியும் பிரபல அமெரிக்க பாடகியுமான கிரிம்ஸ் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
கனடாவைச் சேர்ந்த 32 வயது கிரிம்ஸ் அமெரிக்காவில் பிரபலமான பாடகியாக வலம் வருகிறார். கடந்த 2018 முதல் எலான் மஸ்க்குடன் வாழ்ந்து வரும் இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு எலான் மஸ்க்கின் வித்தியாசமான குறியீட்டு பெயரை வைத்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிரிம்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை அடுத்து எலான் மஸ்க்கிற்கோ அல்லது தனது குழந்தைக்கோ தொற்று ஏற்பட்டதா என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments