ட்விட்டர் புளுடிக் வைத்திருப்பவர்களுக்கு கட்டணம்.. மாதம் இத்தனை ஆயிரம் ரூபாயா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபலமானவர்களின் ட்விட்டர் பக்கத்திற்கு புளுடிக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது என்பது தெரிந்ததே. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வருவதற்கு முன்னர் வரை இது இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாதந்தோறும் புளுடிக் பக்கத்திற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரபலங்களின் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்படுவதன் காரணமாக பிரபலங்களின் உண்மையான டுவிட்டர் பக்கத்தை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக புளுடிக் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் இந்த புளுடிக் வசதியை விண்ணப்பித்து கேட்டுப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி 44 மில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அதிகாரபூர்வ கணக்கு என்பதற்கான புளுடிக் வசதிக்கு மாதம்தோறும் ரூபாய் 1600 வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் புளுடிக் வசதி நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் புளுடிக் பெற்ற பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் பயனாளிகளுக்கு இன்னும் என்னென்ன அதிர்ச்சியை எலான் மஸ்க் கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments