பிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்.....! இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....!

 

தமிழ் யுடியூபர் மதன்கௌரியின் ட்வீட்டிற்கு, எலன் மஸ்க்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து பதில் கூறப்பட்டுள்ளது.

மதன்கௌரி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, இந்தியாவில் டெஸ்லா கார்களை விரைவில் இறக்குமதி செய்யுங்கள் என பதிவிட்டிருந்தார்.

டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், கட்டுமான தலைவராகவும் இருப்பவர் தான் எலன் மஸ்க். இவரின் டுவிட்டர் கணக்கில் இருந்து பதிலளித்திருப்பதாவது, நாங்களும் இந்தியாவில் இதை செய்ய விரும்புகிறோம். ஆனால் உலகளவில் நாட்டை விட இறக்குமதி வரிகள் உயர்ந்ததாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் போலத்தான், தூய்மையான எரிசக்தி வாகனங்கள் கருதப்படுகிறது. இவை இந்தியாவில் உள்ள இலக்குகள் மற்றும் காலநிலைகளுடன் ஒத்துப்போவது சிரமமாக உள்ளது. மின்சார வாகனங்களுக்கு, தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

சென்ற சில வருடங்களாகவே, டெஸ்லா கார் குறித்து டுவிட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, எலன் மஸ்க்-ன் டுவிட்டர் பக்கத்தில் இருந்து தொடர்ந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டெஸ்லா இன்க் சார்பாக இந்திய அமைச்சகங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை அதிகளவில் குறைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.