எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. டிரெண்டிங்கில் 4 வருடங்களுக்கு முன் வெளியான தமிழ் திரைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,June 11 2024]

உலகின் முன்னணி தொழில் அதிபர் எலான் மஸ்க் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ஒரே ஒரு ட்வீட் காரணமாக 7 வருடங்களுக்கு முன் வெளியான தமிழ் திரைப்படம் தற்போது திடீரென ட்ரெண்டிங்கில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி தொழிலதிபர் டெல்சா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை கலாய்க்கும் வகையில் அவர் பதிவு செய்தது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகிறது.

எலான் மஸ்க் பயன்படுத்திய அந்த புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’தப்பாட்டம்’ என்ற திரைப்படத்தின் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் நாயகன் சுதாகர் தனது சமூக வலைதளத்தில் ’2017 ஆம் ஆண்டு எடுத்த படம் ’தப்பாட்டம்’. இன்று உலகம் முழுவதும் இந்த புகைப்படம் பேசப்படுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எலான் மஸ்க் அவர்களுக்கு நன்றி’ என்றும் கூறியுள்ளார்.