நானே வெட்டிக்கொண்டேன்… டிரெண்டான எலான் மஸ்க்கின் புது ஹேர் ஸ்டைல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் புது ஹேர் ஸ்டைல் புகைப்படம் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி இருக்கிறது. அதற்குக் காரணம் தன்னுடைய தலைமுடியை தானே வெட்டிக்கொண்டதாக அவர் கூறியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தானே இயங்கும் டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் ஆராய்ச்சி எனத் தொடர்ந்து வணிகத்தில் கலக்கி வரும் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்து தற்போது சற்று பின்தங்கியுள்ளார். இதனால் அவருடைய சொத்து மத்திப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் எலான் மஸ்க் சமீபத்தில் தன்னுடைய 20 பங்கு சொத்தை விற்றுவிடலாமா? எனத் தனது வாடிக்கையாளர்களிடம் கருத்துக் கேட்டிருந்தார்.
அதற்கு விற்றுவிடலாம் என வாடிக்கையாளர்கள் பதில் அளித்ததையடுத்து தனது 16% பங்குகளை அவர் விற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படி வாடிக்கையாளர்களுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் எலான் மஸ்க் சமீபத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் தாறுமாறாக முடி வெட்டப்பட்டு இருந்ததை தொடர்ந்து அவருடைய ஹேர் ஸ்டைல் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் இது நானே வெட்டிக்கொண்ட ஹேல் ஸ்டைல் எனப் பதில் அளித்திருப்பது தற்போது நெட்டிசன்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சிலர் உங்களுடைய ஹேர் ஸ்டைல் ஹிட்லர் போலவும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் போலவும் இருப்பதாகக் கிண்டலடித்து மீம்ஸ் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com