மீண்டும் எலான் மஸ்க் முதலிடம்.. எப்படி சாத்தியம் ஆகியது?
- IndiaGlitz, [Tuesday,February 28 2023]
கடந்த சில ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் சமீப காலமாக தனது முதல் இடத்தை இழந்தார் என்பதை பார்த்தோம். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவை அடைந்ததும் லாபம் இல்லாத ட்விட்டர் நிறுவனத்தை அவர் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியதும் தான் அவர் முதல் இடத்தை இழக்க காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை LVMH நிறுவனத்தின் பெர்னாட் அர்னால்டு கடந்த சில வாரங்களாக இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் எலான் மஸ்க் முதல் இடத்தை பிடித்து விட்டதாகவும் அவரது நிகர சொத்து மதிப்பு 187.1 பில்லியன் டாலர் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருகிறது என்றும் கடந்த சில வாரங்களில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 100% உயர்ந்து உள்ளதால் அவருடைய சொத்து மதிப்பும் 187.1 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ட்விட்டரை கையகப்படுத்தியது ஆகியவை காரணமாக பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்த நிலையில் தற்போது டெஸ்லா மாடல் கார்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்ததன் காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.