உலகப் பணக்காரர் வரிசையில் பில்கேட்ஸையே பின்னுத்தள்ளிய எலான் மஸ்க்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
SpaceX நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எலான் மஸ்க் உலக பணக்காரர் வரிசைப் பட்டியலில் உலகின் முன்னணி பணக்காரரான பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார். இதற்கு காரணமாக இருந்தது எலான் மஸ்கின் Tesla inc நிறுவனத்தின் பங்குகள். இதன் சந்தை மதிப்பு திங்கள் கிழமை அன்று 500 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. இதனால் எலான் மஸ்க்கின் நிகரச் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்த உலகின் 2 ஆவது பணக்காரராக உயர்ந்து நிற்கிறார்.
46 வயதான எலான் மஸ்க் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் உள்ள அனைவரையும் விட அதிகமான சொத்து மதிப்புகளை பெற்று இருக்கிறார். கடந்த ஜனவரியில் 35 ஆவது இடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது 2 ஆவது இடத்திற்கு கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறார். காரணம் அவருடைய டெஸ்லா இன்க் நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்து இருக்கிறது. இதனால் அவருடைய நிகர சொத்து மதிப்பு 127.9 பில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது.
எஸ்லாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வுத் தொழில்நுட்பங்கள் கார்ப்பரேஷன் (Space Exploration technologies crop) அல்லது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) இல் உள்ள அவரது பங்குகளை விட டெஸ்லா இன்க் நிறுவனத்தின் பங்குகள் நான்கு மடங்கு அதிகம். கடந்த 8 ஆண்டு வரலாற்றில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை இயக்குநர் உலகப் பணக்காரர் வரிசைப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும்போது ப்ளூம்பெர் குறியீட்டின் உறுப்பினர்கள் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்களது நிகர மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட 23% அல்லது 3.13 டிரில்லியன் சொத்து மதிப்பாக உயர்ந்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com