எலான் மஸ்க்கின் புதிய காதலி யார் தெரியுமா? வைரலாகும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்சார கார் உற்பத்தி பற்றிய தகவல்கள் உலக அளவில் மக்களை ஈர்த்து வருகின்றன. இதைப்போலவே அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களும் பொது வெளியில் சுவாரசியத்துடன் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் எலான் மஸ்க்கின் காதல் உறவு குறித்த புதுத் தகவல் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
ஏற்கனவே 2 திருமண முறிவு, ஒரு காதல் முறிவு கொண்ட எலான் மஸ்க் தற்போது 27 வயதான ஆஸ்திரேலிய நடிகை ஒருவரைக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சிட்னியில் பிறந்து வளர்ந்தவரான நடாஷா பாசெட் கடந்த 2019 ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு நாடகப் பயிற்சி பள்ளியில் சேருவதற்காக வந்துள்ளார். பின்னர் மேடை நாடகங்களில் பிரபலமான இவர் தற்போது பல சினிமா படங்களில் நடித்துவருகிறார். எலான் மஸ்க்குடனான காதல் குறித்து பேசியிருக்கும் நடாஷா அவருடைய புத்திசாலித்தனம் தன்னை ஈர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கனடிய எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் என்பவரை கடந்த 2000இல் எலான் மஸ்க் திருமணம் செய்திருக்கிறார். இந்த ஜோடிக்கு 2022 இல் நெவாடா அலெக்சாண்டர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. துருதிஷ்டவசமாக இந்தக் குழந்தை 10 வருடங்களுக்குப் பிறகு உயிரிழந்திருக்கிறது. அடுத்து 2004 இல் கிரிஃபின் மற்றும் சேவியர் எனும் இரட்டைக் குழந்தைகளை இந்த ஜோடி IVF முறையில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த இரட்டைகளுக்கு தற்போது 17 வயதாகும் நிலையில் தொடர்ந்து கடந்த 2006 இல் காய், சாக்சன், டாமியன் எனும் 3 ஆண் குழந்தைகளை IVF முறையில் பெற்றுக்கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு 15 வயதாகிறது. இந்நிலையில் 5 குழந்தைகளுக்கு தாயான ஜஸ்டின் வில்சனை மஸ்க் கடந்த 2008 இல் விவாகரத்து செய்துள்ளார்.
தொடர்ந்து பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலே என்பவரை காதலித்து கடந்த 2010இல் திருமணம் செய்து கொண்ட மஸ்க் அவரை 2012இல் விவாகரத்து செய்துள்ளார். மீண்டும் அவரை 2013இல் மறுமணம் செய்துகொண்ட அவர் 2016இல் அவரை விட்டு பிரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2 திருமண முறிகளுக்குப் பிறகு கடந்த 2018 முதல் அமெரிக்க பாடகி கிரிம்ஸ் சுடனை மஸ்க் காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு கடந்த மே 5 ,2020 இல் ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு எக்ஸ் எனப் பெயரிட்டனர். இந்நிலையில் பாடகி கிரிம்ஸை கடந்த செப்டம்பர் 2021 இல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
2 திருமண முறிவு, ஒரு காதல் முறிவு, 6 மகன்கள் கொண்ட எலான் மஸ்க் தற்போது 50 வயதில் 27 வயதான ஆஸ்திரேலிய நடிகை நாடாஷா பாசெட்டை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு அவருடைய புத்திச்சாலித்தனமே காரணம் என்று நடாஷா கூறியிருக்கிறார். இந்நிலையில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments