கிங் பட்டியலில் இணைந்த எலான் மஸ்க்… ஏழைகளுக்காக எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

உலகின் முதல்தர வரிசை பணக்காரராக இருந்துவரும் எலான் மஸ்க் தன்னுடைய கால்வாசி பங்குகளை கடந்த ஆண்டு விற்பனை செய்தது குறித்து பலரும் அறிந்திருப்போம். ஆனால் அந்தப் பணத்தை எலான் மஸ்க் என்ன செய்தார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி பலரரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

டெஸ்லா, விண்வெளி ஆராய்ச்சி என அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்திருக்கும் எலான் மஸ்க் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-29 ஆம் தேதிகளுக்குள் தன்னுடைய 50.44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி அளவுள்ள இந்தப் பணத்தை அவர் உலக உணவு பாதுகாப்பு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கினார் என்று அமெரிக்க பங்கு வர்த்த மையம் தற்போது தெரிவித்துள்ளது.

முன்னதாக உலக உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி, உலகம் முழுவதும் மக்கள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர். இதற்காக உலகப் பணக்காரர்கள் 660 கோடி டாலர்களை நன்கொடையாக வழங்கினால் உலகில் 4.20 கோடி மக்கள் பட்டினியால் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்றும் அவர்களுக்கு உணவு வழங்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சமூகவலைத் தளத்தில் உரையாடிய எலான் மஸ்க் 600 கோடி டாலர்களை வைத்து நீங்கள்(உலக உணவு அமைப்பு) எப்படி உலக மக்களின் பட்டினியைப் போக்குவீர்கள் என்று விளக்கினால் நான் டெஸ்லா பங்குகுளை விற்கத் தயார், அப்போதுதான் இந்தப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது மக்களுக்குப் புரியும் என்று அதிரடியாகத் தெரிவித்து இருந்தார்.

இதைப்பார்த்த இணையவாசிகள் இதெல்லாம் உண்மையில் நடக்குமா? என்று தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்ததனர். ஆனால் உண்மையில் எலான் மஸ்க் கடந்த ஆண்டு நவம்பரில் தன்னுடைய 50.44 லட்சம் பங்குகளை விற்றதாகவும் அதில் கிடைத்த பணத்தை 6 பில்லியன் டாலர் அதாவது 45 கோடிக்கும் அதிகமான பணத்தை தற்போது உலக உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அமெரிக்க பங்கு வர்த்தக மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க் செய்த இந்தக் காரியத்தைப் பார்த்த நம்முடைய நெட்டிசன்கள் அவர் “கிங்“ பட்டியலில் இணைந்துவிட்டதாகப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதேபோல பில்கேட்ஸின் கேட்ஸ் அமைப்பு உலக உணவு பாதுகாப்பு அமைப்புக்கு 1.50 கோடி டாலர்களை நன்கொடை அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.