டுவிட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே எலான் மஸ்க் செய்த அதிரடி: வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிர்வாகிகள்!

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில், டுவிட்டரை வாங்கிய ஒரு சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டரை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில் அதிகாரபூர்வமாக ட்விட்டர் தற்போது எலான் கைக்கு வந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஒரு சில நிமிடங்களில் அவர் செய்த முதல் வேலை டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோர்களையும் பணி நீக்கம் செய்துள்ளார், இருப்பினும் இந்த தகவலை ட்விட்டர் நிறுவனமோ அல்லது எலான் மஸ்க் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் குறிப்பிடுகையில், டுவிட்டரை தான் வாங்கியது பொது நல நோக்கத்திற்காக என்றும் எல்லோருடைய கருத்துக்களையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக இருக்கிறது என்றும் ட்விட்டர் நிறுவனத்தை நான் வாங்கியது வருமானத்திற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு மூன்று முக்கிய மாற்றங்களை கொண்டு வரப்போவதாக கருதப்படுகிறது. குறிப்பாக உண்மைக்குப் புறம்பான தகவல், ஆதாரமற்ற தகவல்கள் உள்ள டுவிட்டுக்களை அம்பலப்படுத்தி, பொய்யான தகவல்களை வெளியிடும் டுவிட்டர் கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக தெரிகிறது.

மேலும் பயனர்களுக்கு பயனுள்ள தகவல்களை முன்னிலைப்படுத்தி காண்பிப்பது மற்றும் வெளிப்படைத் தன்மையை கொண்டுவருவது ஆகியவற்றை அமல்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். அதேபோல் போலி கணக்குகளை நீக்குவதற்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தான்!

கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களின்

விக்ரமனை வீழ்த்த நடத்தப்படும் சூழ்ச்சி ஆலோசனை. யார் யார் கலந்து கொண்டனர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக போட்டியாளர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பொம்மை

ரக்சிதாவை இந்த பார்வை பாக்குறாரே.. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசனத்துடன் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியான பாயிண்ட் எடுத்து பேசுவதிலும்

இந்த வார எலிமினேஷன் யார்? டேஞ்சர் ஜோனில் இந்த இருவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளியாகி உள்ளது

'யசோதா' யாருன்னு தெரியுமில்ல.. அந்த கிருஷ்ண பரமாத்வையே பெத்தவ.. 'யசோதா' டிரைலர்

 நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வழியாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.