டிவிட்டர் பதிவை பார்க்கவே கட்டுப்பாடு? திடுக்கிடும் அறிவிப்பு வெளியிட்ட எலான் மஸ்க்!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்தே அதில் பல்வேறு புது மாற்றங்களைப் புகுத்தி வருகிறார். மேலும் அவர் கொண்டுவரும் சில கட்டுப்பாடுகள் அதன் பயனாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திவரும் நிலையில் அதிர்ச்சியான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகின் முதல் பணக்காரராக இருந்துவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கடந்த நவம்பர் மாதம் 44 பில்லியன் டாலர் கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். இந்நிறுவனத்தின் சிஇஓவாக தற்போது லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் அதில் தொடர்ந்து பல்வேறு புது மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்குகளைப் பெறுவதற்கு (ப்ளூ டிக்) மாதம்தோறும் சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவுப்பு வெளியாகியது. அதைத்தொடர்ந்து பதிவு உரையாடல்களில் எடிட் செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டது. முன்னதாக 30 நிமிடங்களுக்குள் எடிட்டிங் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது 60 நிமிடங்களாக அது உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ப்ளூ டிக் உரிமையாளர்கள் (Verified acoounts) மட்டும் நாளொன்றுக்கு டிவிட்டரில் 6,000 பதிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்றும் மற்றடி ப்ளூ டிக் பெறாத சாதாரண வாடிக்கையாளர்கள் தினமும் 600 பதிவுகளையும் புதிய வாடிக்கையாளர்கள் வெறுமனே 300 பதிவுகளையும் பார்த்துக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

டேட்டா ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் மேனிப்புலேசன் வசதிக்காக இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் நிலையில் நேற்று இரவு டிவிட்டர் இணையப்பக்கம் முடங்கிய நிலையில் சற்று நேரத்தில் அது சரிசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போதுள்ள தொழிலநுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்பு இந்த வரம்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் ப்ளூ டிக் வாடிக்கையாளர்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகளை பார்க்கவும், ப்ளூ டிக் பெறாத பயனர்கள் தினமும் 1000 பதிவுகளையும் பார்க்கவும் புதிய வாடிக்கையாளர்கள் தினமும் 500 பதிவுகளைப் பார்க்கவும் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More News

'ஜிகர்தண்டா 2' படத்தின் சூப்பர் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்.. இணையத்தில் வைரல்..!

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா' திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி

நிஜ வாழ்க்கையில் ஆணாக மாறினால்.. ஹன்சிகா பேட்டி..!

நடிகை ஹன்சிகா 'பார்ட்னர்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் திடீரென ஆணாக மாறும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் உண்மையிலேயே அவர் தனது

சிங்களா இருக்கிறது செம Bore? திருமணம் குறித்து ஓப்பனா பேசிய பிக்பாஸ் நடிகை!

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று,

என்னவொரு எணர்ஜி? 'லியோ' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய இந்தியக் கிரிக்கெட் வீரர்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'லியோ' திரைப்படம் ரசிகர்களிடையே

பிரபல யூடியூபர் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. பூஜையுடன் படப்பிடிப்பு..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 5 திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டும் அவர் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் 'ஜவான்' மற்றும் 'இறைவன்' ஆகியவை குறிப்பிடத்தக்க