நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட எலிசபெத்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வனிதா திருமணம் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருப்பது தெரிந்தது. வனிதாவின் திருமணத்தை எதிர்த்தும், பீட்டரின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் சூர்யாதேவி ஆகியோர் குரல் கொடுத்தனர் என்பதும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே
இந்நிலையில் பீட்டர்பால் மனைவி எலிசபெத் ஹெலன் தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த மன்னிப்பு வீடியோவை நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் எலிசபெத் ஹெலன் அவர்கள் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம்! லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் எங்களுக்காக சப்போர்ட் செய்து பேசினார்கள். நாங்கள் சொல்லி தான் அவர் பேசினார். ஆனால் வனிதா அவர்களை ரொம்பத் தவறாகவும் மட்டமாகவும் தரக்குறைவான வார்த்தைகளை பேசி அவரை கஷ்டப்படுத்தி உள்ளார். எங்களுக்காக லட்சுமி ராமகிருஷ்ணன் உதவி செய்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நினைத்து எங்களுக்கு கஷ்டமாக உள்ளது
நியாயத்திற்காக தான் லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் கொடுத்தார். ஆனால் வனிதா அதை புரிந்து கொள்ளாமல் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவருடைய வயதுக்கு கூட வனிதா மரியாதை கொடுக்கவில்லை. தரக்குறைவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. இதனால் நான் இரண்டு நாட்களாக தூங்கவே இல்லை. என்னால்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்
எனவே வனிதா இவ்வாறு பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்களால் தான் அவருக்கு இந்த அவமதிப்பு ஏற்பட்டது. வனிதா செய்தது தவறுதான். அவர் மன்னிப்பு கேட்பாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எங்களுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றி’ என்று எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
#Elizabeth is apologising though she did nothing wrong, she feels bad that she put us in trouble! She is a strong woman #Feminism #Empowerment is not about destroying another woman . pic.twitter.com/QwCGic04xX
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout