நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட எலிசபெத்: வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வனிதா திருமணம் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருப்பது தெரிந்தது. வனிதாவின் திருமணத்தை எதிர்த்தும், பீட்டரின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் சூர்யாதேவி ஆகியோர் குரல் கொடுத்தனர் என்பதும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே 

இந்நிலையில் பீட்டர்பால் மனைவி எலிசபெத் ஹெலன் தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த மன்னிப்பு வீடியோவை நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் எலிசபெத் ஹெலன் அவர்கள் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம்! லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் எங்களுக்காக சப்போர்ட் செய்து பேசினார்கள். நாங்கள் சொல்லி தான் அவர் பேசினார். ஆனால் வனிதா அவர்களை ரொம்பத் தவறாகவும் மட்டமாகவும் தரக்குறைவான வார்த்தைகளை பேசி அவரை கஷ்டப்படுத்தி உள்ளார். எங்களுக்காக லட்சுமி ராமகிருஷ்ணன் உதவி செய்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நினைத்து  எங்களுக்கு கஷ்டமாக உள்ளது

நியாயத்திற்காக தான் லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் கொடுத்தார். ஆனால் வனிதா அதை புரிந்து கொள்ளாமல் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவருடைய வயதுக்கு கூட வனிதா மரியாதை கொடுக்கவில்லை. தரக்குறைவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. இதனால் நான் இரண்டு நாட்களாக தூங்கவே இல்லை. என்னால்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன் 

எனவே வனிதா இவ்வாறு பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்களால் தான் அவருக்கு இந்த அவமதிப்பு ஏற்பட்டது. வனிதா செய்தது தவறுதான். அவர் மன்னிப்பு கேட்பாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எங்களுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றி’ என்று எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

More News

கொரோனாவில் இருந்து மீண்ட தமிழ் நடிகை: விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'தீர்ப்பு', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை', 'கழுகு', விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுமலதா.

கொரோனா பெயரில் ஒரு துணிக்கடை: இரண்டு இளைஞர்களின் புதிய முயற்சி

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கோவிட் 19 என்ற பெயரை கேட்டாலே மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்

திமுக பெண் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: மகள், மருமகனுக்கும் பாதிப்பு என தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒருசில அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

என்னது… முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 1 லட்சம் அபராதமா??? அதிரடி காட்டும் மாநிலம்!!!

ஜார்கண்ட் மாநில சட்ட சபையில் நேற்று புதிதாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

முதன்முறையாக 6,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 4000க்கும் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மட்டும் 6000ஐ நெருங்கியுள்ளதால்