கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானஸ் இல் தற்போது ஒரு புது சிக்கல் வெடித்து இருக்கிறது. அந்நாட்டின் ஓகவாங்கோ மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றன என்ற தகவலை பிரிட்டனைச் சார்ந்த ஒரு ஆய்விதழ் வெளியிட்டு இருக்கிறது. அதையடுத்து கடந்த மே மாதல் முதல் 350 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் கூறப்படுகிறது. இதற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஒகவாங்கோ டெல்டா பகுதியில் பல்லுயிர் விஞ்ஞானிகள் தற்போது யானைகள் இறப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்கள் விமானத்தில் மூலம் ஆய்வு மேற்கொண்டதில் 162 யானைகள் இறந்து இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. உடனே அந்நாட்டு அரசுக்கும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப் பட்டது. ஆனால் யானைகள் இறப்பதற்கு முழுமையான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. சயனைட் போன்ற நச்சுப் பொருட்கள் கொடுக்கப் பட்டு இருந்தால் காட்டில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இறந்து போயிருக்கும். ஆனால் யானைகள் மட்டுமே இறக்கின்றன. ஒருவேளை வேட்டைக் காரர்களின் செயலாக இருக்குமோ என்ற அச்சமும் எழுந்து இருக்கிறது.
இதையடுத்து தந்தங்களுக்காக யானைகளை சமூக விரோதிகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க பகுதிகளில் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்த் தொற்று பரவி பெரும்பாலான விலங்கினங்களை தாக்கியது. அதுபோல பெருந்தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சமும் தற்போது எழுந்து இருக்கிறது. வறட்சி போன்ற எந்த இயற்கை பேரிடர்களில் இல்லாத சூழலில் யானைகள் இப்படி இறப்பதும் விஞ்ஞானிகளுக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுகுறித்த விரிவான ஆராய்ச்சியை அந்நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments