ஆக்ரோஷமாக ஓடிவந்த காட்டு யானையுடன் செல்பி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் மிக அதிகமாகி உள்ளது என்பதும் செல்பி மோகத்தால் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான முறைகளில் செல்பி எடுத்துக் கொள்வதே உயிரிழப்பிற்கு காரணம் என்றும் செல்பி எடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் காட்டு யானை கூட்டம் ஒன்று பொது மக்களை விரட்டிக்கொண்டு வரும்போது செல்பி எடுத்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காட்டு யானைகள் திடீரென கிராமத்திற்குள் நுழைந்ததால், அந்த யானைகளை பொதுமக்கள் விரட்ட முயற்சித்தபோது பொதுமக்களை அந்த யானைகளை விரட்ட தொடங்கின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தப்பித்து ஓடி உள்ளனர். இந்த நிலையில் ஆக்ரோஷமாக யானை ஒன்று தனியாக ஓடி வருவதைப் பார்த்த இளைஞர் ஒருவர் அந்த யானை ஓடி வருவதை செல்பி வீடியோ எடுத்துள்ளார். அந்த இளைஞர் அருகே வந்த யானை திடீரென வேறு பாதையில் திரும்பி விட்டதால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்ச்க்குள்ளாக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout