எங்களது எலக்ட்ரானின் இசை குரு காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் என்ற புகழை பெற்ற ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் காலமான நிலையில் அவரது மறைவுக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்
கிரேக்க நாட்டின் எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் வேங்கலிஸ் என்பவர் காலமானார். அவருக்கு வயது 79. அவருடைய மறைவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கிரேக்க நாட்டின் பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது மறைவு குறித்து தங்களது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் எலக்ட்ரானிக் இசைமேதை வேங்கலிஸ் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். எங்களது எலக்ட்ரானிக் இசை குரு தற்போது உயிருடன் இல்லை என்பதை நினைத்து பார்க்கவே வருத்தமாக இருக்கிறது என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Chariots of Fire என்ற படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக வேங்கலிஸ் ஆஸ்கார் விருதை பெற்றார் என்பதும் அதுமட்டுமின்றி இந்த படம் இசை உள்பட மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments