எங்களது எலக்ட்ரானின் இசை குரு காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!

எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் என்ற புகழை பெற்ற ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் காலமான நிலையில் அவரது மறைவுக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்

கிரேக்க நாட்டின் எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் வேங்கலிஸ் என்பவர் காலமானார். அவருக்கு வயது 79. அவருடைய மறைவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கிரேக்க நாட்டின் பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது மறைவு குறித்து தங்களது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் எலக்ட்ரானிக் இசைமேதை வேங்கலிஸ் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். எங்களது எலக்ட்ரானிக் இசை குரு தற்போது உயிருடன் இல்லை என்பதை நினைத்து பார்க்கவே வருத்தமாக இருக்கிறது என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Chariots of Fire என்ற படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக வேங்கலிஸ் ஆஸ்கார் விருதை பெற்றார் என்பதும் அதுமட்டுமின்றி இந்த படம் இசை உள்பட மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'தி லெஜண்ட்' படத்தின் வாடிவாசல் பாடல்: செம கலர்புல் என குவியும் பாராட்டு!

 சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட்' சரவணன் நடிப்பில் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

விமானம் பறக்க… 5 நிமிட கரகோஷத்தில் நனைந்த நடிகர் டாம் குரூஸ்… நெகிழ்ச்சி தருணம்!

பிரான்ஸ் நகரில் 75 ஆவது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

'வாயாடி பெத்த புள்ள' ஆராதனா பாப்பா இப்படி வளர்ந்துட்டாங்களே: லேட்டஸ்ட் புகைப்படம்!

'வாயாடி பெத்த பிள்ளை' என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாப்பா கிடுகிடுவென வளர்ந்துள்ளது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது .

குடும்பத்துடன் துபாய் சென்ற நெல்சன்: உடன் சென்ற நடிகை யார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடன் பிரபல நடிகை, பிரபல நடிகர் மற்றும் சிலரும் சென்றுள்ளனர். 

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தின் டைட்டில் இதுவா? 

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்தது வைரலாகி வருகிறது .