வெட்டுக்கிளியை அழிக்கும் மின்வலை பொறி: சேலம் மாணவரின் புதிய கண்டுபிடிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவுக்கு அடுத்து இந்தியாவின் அடுத்த பேரழிவாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பு கருதப்படுகிறது. ஒரே நேரத்தில் பல கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் பயிர்களை நாசம் செய்து விடுகிறது. அரசாங்கம் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்கம் முயச்சியில் பூச்சிக்கொல்லி மருந்து, சப்தம் எழுப்புதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் வெட்டுக்கிளிகளை ஈர்க்கும் வண்ணம் மின் வலை பொறியைத் தயாரித்துள்ளார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த பெருமாக்கவுண்டம் பாளையத்தில் வசிக்கும் உதயக்குமார் (19) திருச்சி அண்ணாப் பல்லைக்கழக வளாகத்தில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க் படித்து வருகிறார். வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பொதுவாக பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப் படுவது வழக்கம். தற்போது படையெடுத்து இருக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க வேண்டும் என்றால் அதிகளவில் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் நிலம் பாழாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே புதிதாக மின்வலை பொறியைத் தயாரித்து உள்ளதாக உதயக் குமார் கூறியுள்ளார். அடிப்படையில் வெட்டுக்கிளிகள் மின் விளக்குகளால் ஈர்க்கப்படும் தன்மையுடையவை. மின் விளக்குகளை சுற்றி அடுக்கடுக்கான கம்பி வேலிகளைச் சுற்றி அதில் மின் இணைப்பை பொருத்தி விட்டால் இரவு நேரங்களில் வெட்டுக்கிளிகளை ஈர்த்து அவை ஒரே நொடியில் அழித்து விடும் என இந்த மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.
வயலின் நான்கு புறங்களிலும் நான்கு மின் வலை பொறியை பொருத்தி விட்டால் போதும் லட்சக் கணக்கான வெட்டுக்கிளிகளை அழித்து விடலாம். இறந்த வெட்டுக்கிளிகளை பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். தமிழகத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் இருக்காது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒருவேளை தமிழகத்தை வெட்டுக்கிளி படையெடுப்பு தாக்கும்போது இந்த மின் வலை பொறி மிகவும் உதவியாக இருக்கும் எனவும் மாணவர் கூறியிருக்கிறார். மேலும் குறைந்த விலையில் இந்தக் கருவிகளைத் தயாரிக்க முடியும் எனவும் மாணவர் நம்பிக்கை அளித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments