தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிப்பு.. 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு சில தமிழ் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருந்ததாகவும் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படங்களில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 4ஆம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை தேதியாக இருந்தாலும் மே மாதம் முதல் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ படம் ரிலீஸ்-க்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆகி உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்காகவே காத்திருந்தது. இந் நிலையில் இந்த படம் மே மாதம் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா முழுவதும் புரமோஷன் செய்யப்பட வேண்டிய நிலை இருப்பதால் தேர்தலுக்குப் பின் ஒரு சில வாரங்கள் மட்டும் கால அவகாசம் எடுத்து ரிலீஸ் ட் செய்யப்படும் என்றும் தெரிகிறது .
இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தனுஷின் ‘ராயன்’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கல்கி 2898’ ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com