தேர்தல் ஆணையம் அதிரடியால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகார்கள் குறித்து ஆராய்ந்த தேர்தல் ஆணையம் தற்போது அதிமுகவிடம் விளக்கம் கேட்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலாளரை நியமிக்க முடியும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சற்றுமுன் ஓபிஎஸ் அவர்கள் அளித்த பேட்டியில் சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிரந்தர பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேவையில்லாமல் எங்களை சீண்ட வேண்டாம். சசிகலாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளுக்கு திமுகதான் பின்னால் உள்ளதாக சசிகலா உள்பட அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்....

சூழ்ச்சி வலையில் விழுந்துவிட்டர் ஓபிஎஸ். வைகைச்செல்வன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒருபக்கம் செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து பணியில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்பது உள்பட பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் சற்று முன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர

சசிகலாதான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக கருத்து தெரிவித்து வந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமே அவர்தான். ஜெயலலிதா மீது மட்டுமின்றி சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தவர் சுவாமி...

மிடாஸ் நிறுவனத்தை நடத்துபவர் எப்படி பொதுச்செயலாளர் ஆகலாம்? பி.எச்.பாண்டியன் கேள்வி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நேற்றிரவு முதல் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மாபெரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அதிமுக கட்சியினர்களும், நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்...

வீதி வீதியாக சென்று மக்களை சந்திப்பேன். ஓபிஎஸ்

பாஜக எனக்கு பின் இருப்பதாக கூறுவது வடிகட்டிய பொய். எனக்கு பின்னால் யாரும் இல்லை. யாரும் என்னை ஆட்டுவிக்கவில்லை...