சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்பி தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருப்பதால், இந்த நோட்டீஸை தேர்தல் ஆணையம் பெங்களூர் சிறை முகவரிக்கே அனுப்பியுள்ளது.
சசிகலா குறித்து ஓ.பி.எஸ்.தரப்பு அளித்த குற்றச்சாட்டுக்கு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா விளக்கம் அளிக்கவில்லை என்றாலோ, அல்லது அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ தேர்தல் ஆணையம் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அறிவித்தால் அவர் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம் உள்பட அவர் எடுத்த எந்த முடிவுகளும் செல்லாமல் போகும். இதனால் ஓபிஎஸ் அணியின் கை ஓங்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout