மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: கைதட்டி கொண்டாடிய கமல்!
- IndiaGlitz, [Friday,January 15 2021]
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தப் பொதுத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் மய்யம் மையம் கட்சி போட்டியிடுகிறது என்பதும் இதற்காக தற்போது கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்திற்கு டார்ச்லைட் சின்னம் வழங்க முடியாது என்றும், அக்கட்சிக்கு புதுவையில் மட்டுமே டார்ச்லைட் சின்னம் வழங்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் நீதிமன்றம் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கமல்ஹாசனின் கட்சிக்கு தமிழகத்திலும் டார்ச்லைட் சின்னம் கிடைத்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!
மேலும் இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘234 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் கிடைத்துள்ளது என்று கூறி அருகில் இருந்த கட்சியினர்களுடன் கமல்ஹாசன் கைதட்டி கொண்டாடினார். கமல் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2021
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
(1/2) pic.twitter.com/MqzKEBiidR