ஜெ. வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை சில மணி நேரங்களுக்கு முன்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண்நாயர் புகாரின்பேரில் வெற்றிவேல் மீது 126 ( பி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்
முன்னதாக 'ஜெயலலிதா வீடியோ தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ தொடர்பாக தற்போது வரை எந்த புகாரும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையத்தின் தமிழக பிரிவு அதிகாரி பேட்டி அளித்திருந்தார். தற்போது தேர்தல் நடத்தும் அதிகாரியே புகார் செய்துள்ளதால் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments