ஜெ. வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை சில மணி நேரங்களுக்கு முன்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்  சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் தேர்தல்  நடத்தும் அலுவலர் பிரவீண்நாயர் புகாரின்பேரில் வெற்றிவேல் மீது 126 ( பி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்

முன்னதாக 'ஜெயலலிதா வீடியோ தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ தொடர்பாக தற்போது வரை எந்த புகாரும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையத்தின் தமிழக பிரிவு அதிகாரி பேட்டி அளித்திருந்தார். தற்போது தேர்தல் நடத்தும் அதிகாரியே புகார் செய்துள்ளதால் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து மனுதாக்கல்

சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்த சென்னை 2 சிங்கப்பூர் இயக்குனர்

இளைஞர்களின் புதிய முயற்சியில் கடந்த வாரம் வெளியான 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் முதல் பாதி நல்ல விமர்சனத்தையும் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களையும் பெற்றது

ஜெயலலிதா வீடியோ உண்மையா? அப்பல்லோ விளக்கம்

ஆர்.கே.நகர் இடைதேர்தலின் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் 'உள்குத்து' கதை

'அட்டக்கத்தி' படத்தின் நாயகி, நாயகி தினேஷ் மற்றும் நந்திதா மீண்டும் இணைந்துள்ள படம் 'உள்குத்து'. இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் ராஜூ

ஜெ. வீடியோ வெளியீடு தேர்தல் விதிமீறல்: ராஜேஷ் லக்கானி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட 7 வினாடி வீடியோ ஒன்றை சற்றுமுன்னர் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி