திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினால் காலியான திருவாரூர் தொகுதிக்கும், ஏ.கே.போஸ் மறைவினால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் தேர்தல் ஆணையம் ஐந்து மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் சத்தீஷ்கர் மாநிலத்திற்கு முதல்கட்டமாக நவம்பர் 12ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

அதேபோல் மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் தமிழக தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும், மழை நிலவரத்தை பொருத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.