5 மாநில சட்டசபை தேர்தல் தேதி. தேர்தல் ஆணையர் அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,January 04 2017]
கிட்டத்தட்ட ஒரு மினி பொதுத்தேர்தல் போல நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை சற்று முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மார்ச் 27ஆம் தேதியும், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மார்ச் 18ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 690 சட்டப்பேரவை தொகுதிகள் இருப்பதாகவும், மொத்தம் 16 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலின்போது பெண்களுக்கு தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.