மும்பையில் 4 வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்த முதிய பெண்: கொலை செய்த மருமகள்

  • IndiaGlitz, [Friday,July 17 2020]

மும்பையில் ஒரே ஒரு வீடு இருந்தாலே பணக்காரர் என்ற நிலையில் நான்கு வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்து வந்த முதிய பெண் ஒருவரை அவரது மருமகளே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள சஞ்சனா என்ற 70 வயது பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு குழந்தை இல்லாததால் கணவரின் சகோதரர் மகன் தினேஷ் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தினேஷுக்கு அஞ்சனா என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு வீட்டில் சஞ்சனா, தினேஷ் மற்றும் அஞ்சனா ஆகியோர் வாழ்ந்து வந்தனர். சஞ்சனா 70 வயதாகியும் அருகிலுள்ள ஜெயின் கோவிலில் பிச்சை எடுக்கும் தொழில் செய்து வந்தார். மேலும் பிச்சை எடுத்த பணத்தை அவர் எங்காவது மறந்து வைத்துவிட்டு மருமகள் அஞ்சனாவிடம் சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சஞ்சனாவிடம் அவரது மருமகள் அஞ்சனா வீடுகளை தனது பெயரில் எழுதி வைக்கும்படி கூறியதாகவும் இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென நேற்று சஞ்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். சஞ்சனாவின் உடலில் இருந்த காயத்தை பார்த்த மருத்துவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை அதிகாரிகள் அஞ்சனாவை விசாரித்த போது தனது மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மாமியார் தன்னிடம் அடிக்கடி சண்டை போட்டதாகவும் தனது பெயரில் வீட்டை எழுதி கொடுக்க வலியுறுத்தியபோது முடியாது என்று கூறியதாகவும் அதனால் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்து மாமியார் சஞ்சனாவை கிரிக்கெட் மட்டையால் அடித்ததாகவும் அதன் பின்னும் அவர் மரணம் அடையாததால் பாவாடை நாடா மற்றும் மொபைல் சார்ஜரை எடுத்து அவரது கழுத்தில் இறுக்கி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கூறியுள்ளார். இதனை அடுத்து அஞ்சனாவை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

HCL நிறுவனத்தின் தலைவராகும் இந்தியாவின் பணக்காரப் பெண்!!!

HCL நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ஷிவ் நாடார் வருகிற 17 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

லட்டு பிடிக்கிறவரையும் இந்த கொரோனா விட்டு வைக்கல… திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட பரபரப்பு!!!

உலகத்துக்கே படியளுக்குற ஏழுமலையான் கோவிலில் தற்போது கொரோனா தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

டபுள் பவருடன் கொரோனா தடுப்பூசி: கெத்துக் காட்டும் விஞ்ஞானிகள்!!! எப்ப கிடைக்கும் தெரியுமா???

தற்போதைய நிலைமையை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி மட்டுமே இறுதி தீர்வு என ஒட்டுமொத்த உலகமும் நம்பிக் கொண்டிருக்கிறது.

பிளஸ் 2வில் முதல் மார்க் எடுத்த மாணவர் தற்கொலை: வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும்

கொரோனா ஊரடங்கு எதிரொலி: சினிமா ரசிகர்களுக்கு புதிய வகை தியேட்டர் ஏற்பாடு!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட