உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக வீராங்கனைக்கு தங்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிவி சிந்து உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற நிலையில் தற்போது இன்னொரு வீராங்கனை தங்கம் வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் வளரிவான் சாதனை புரிந்துள்ளார். 250.6 புள்ளிகள் பெற்ற பிரிட்டனின் Seonaid Mcintosh இரண்டாம் இடம் பெற்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவன் தற்போது உலகக்கோப்பையிலும் தங்கம் வென்றதை அடுத்து அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. 20 வயதான கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவான் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இந்தியாவின் அபூர்வி சாந்தலா, அஞ்சலி பகவத் ஆகியோர் ஏற்கனவே உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ள நிலையில் இளவேனில் வளரிவான் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout