'லிப்ட்' பட பிரச்சனை குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
- IndiaGlitz, [Wednesday,September 15 2021]
கவின் நடித்த ’லிப்ட்’ என்ற திரைப்படத்தின் பிரச்சனை குறித்து லிப்ரா புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தமிழ் திரைப்படமான ’லிப்ட்’ என்ற திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் அவர்களின் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ரவீந்தர் சந்திரசேகரன் நடந்து கொள்ளாததால் எங்களது ஈகா என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் இடையே செய்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நபரான திலீப்குமார் சென்னை காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரிடம் ’லிப்ட்’ தமிழ் திரைப்படத்திற்கு சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமையும் இல்லை. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் அவர்களிடம் ’லிப்ட்’ தமிழ் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
லிப்ட் தமிழ் திரைப்படத்தின் அனைத்து அதிகாரபூர்வ செய்திகளும் ஈகா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தினால் மட்டுமே ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், ஊடகத்திற்கும் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Press Statement regarding #Lift!@Kavin_m_0431 @Actor_Amritha @VineethVarapra1 @Hepzi90753725 @willbrits @ganesh_madan @Yuvrajganesan @GayathriReddy95 @kirankondaa @actorabdool_lee @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/oMRduCa5J1
— Ekaa Entertainment (@EkaaEntertainm1) September 13, 2021