close
Choose your channels

ஜூலை 28ல் 8 தமிழ் படங்கள் ரிலீஸ்.. என்னென்ன படங்கள் தெரியுமா?

Sunday, July 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் வரும் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8 தமிழ் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவற்றில் முக்கிய படமாக சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற படம் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ’தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் இந்த படம் அடுத்த பாகமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பரத். வாணி போஜன் நடித்த ’லவ்’ என்ற திரைப்படம் ஜூலை 28 இல் வெளியாகிறது. பரத்தின் 50 ஆவது படமான இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தல தோனியின் ’எல்ஜிஎம்’ திரைப்படம் ஜூலை 28ல் வெளியாக உள்ளது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு நடித்த இந்த திரைப்படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ’பீட்சா’ படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பு நிலையில் இதன் மூன்றாவது பாகம் ‘பீட்சா 3’ வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. த்ரில் அம்சம் கொண்ட இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது என்பதும் அஸ்வின், காளி வெங்கட், பவித்ரா, கௌரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜூலை 28ல் வெளியாகும் ’டைனோசர்’ ’மேலே இருக்கிறவன் பாத்துக்குவான்’, ‘அறமுடைத்த கொம்பு’ மற்றும் ’டெரர்’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வாரம் வெளியாகும் எட்டு திரைப்படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment