தமிழகத்தில் கொரோனாவுக்கு 8வது பலி: 45 வயது நபர் உயிரிழந்ததால் பரபரப்பு
- IndiaGlitz, [Wednesday,April 08 2020]
தமிழகத்தில் கொரோனாவால் நேற்று வரை 6 பேர் மட்டுமே பலியாகி இருந்த நிலையில் நேற்று மாலை பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டிக்கு பின்னர் வேலூரில் 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது. இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது
வேலூரில் உயிரிழந்த நபரின் வயது 45 தான் என்றும், இவர் வெளிநாடு அல்லது டெல்லி மாநாடு உள்ளிட்ட எந்த வெளி மாநிலத்திற்கு செல்லவில்லை என்றும் இருப்பினும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவியது என்பது மர்மமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வேலூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேர் உள்ளதாகவும் 818 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பதாகவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு வேலூருக்கு திரும்பி வந்தவர்கள் 55 பேர்களில் 41 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்களது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தினமும் 50க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் ஓரிருவர் உயிரிழந்தும் வருவது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது